News Update :

Sunday, April 16, 2017

TamilLetter

இந்தியாவினால் தேடப்படும் ஜாகிருக்கு மலேசியாவில் வீர விருது!



இந்தியாவினால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஜாகிர் நாயக் என்பவருக்கு மலாய்வாத வலதுசாரி அமைப்பான பெர்காசா, இன்று வீர விருது அளித்து கௌரவித்திருக்கிறது.
இன்று மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இந்த விருதினை ஜாகிர் நாயக்கிற்கு அளித்து கௌரவித்தார்.
இந்த விருதினை பெர்காசா அமைப்பு வெளிநாட்டவர் ஒருவருக்கு அளிப்பது இதுவே முதன் முறையாகும். ஏற்கெனவே இந்த விருதை துன் மகாதீருக்கும் துன் ஜைனுடினுக்கும் அளித்திருக்கிறது.
பல்வேறு தீவிரவாதச் செயல்கள் காரணமாக, இந்திய பிரஜையான ஜாகிரை இந்தியா தேடிவருகிறது. மேலும் அவரைக் கைது செய்வதற்கு அனைத்துலக போலீஸ் துறையான இண்டர்போலின் உதவியை நாடப்போவதாக இந்திய தேசிய புலன் விசாரணைத் துறை அறிவித்த மறுநாள் அவருக்கு மலேசியாவில் பெர்காசா இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-