News Update :

Tuesday, April 18, 2017

TamilLetter

மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு அல்- முனவ்வறா கல்லுாரியின் அதிபர் பாராட்டு



அரசியல் அதிகாரமிக்க  ஒருத்தர் அக்கரைப்பற்று கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக இருப்பதனால்தான் உதைப்பந்தாட்டத்துறையை பயனுள்ளதாக மாற்ற முடிந்தது என இலங்கை கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் அல்-முனவ்வறா பாடசாலையின் அதிபருமான ஏ.ஜீ.அன்வர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கால் பந்தாட்ட சம்மேளனத்தின் முகாமைத்துவ குழுக்  கூட்டம் இன்று இரவு(18) பதியுதீன் முகம்மட் வித்தியாலயத்தில் சம்மேளனத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தலைமையில் இடம் பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்  இன்றைய காலகட்டத்தில் விளையாட்டு கழகங்களை ஒழுக்க நெறியுடன்  ஒரு கட்டுக் கோப்புக்குள் கொண்டு வருவது இலகுவான காரியமல்ல.ஒவ்வொறு வீரர்களும் பல பிரச்சினைகளை  சுமந்து கொண்டு வருகின்றனர்.அத்தோடு  விளையாட்டோடு தொடர்புடைய வளங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய பாரிய தேவை நமது சம்மேளனத்திற்கு ஏற்பட்டது.இவற்றையெல்லாம் தீர்த்து வைப்பதற்கு அதிகாரமுள்ள ஒரு தலைமை தேவைப்பட்டது.அதனை நன்கு உணர்ந்துதான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களை தலைவராக தெரிவு செய்தோம்.அவர் தலைவராக வந்த பிற்பாடுதான் மூன்று வருடங்களாக செய்ய முடியாத பல வேலைத் திட்டங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடித்ததை என்னி சந்தோசமடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-