கால்தீன் - அக்கரைப்பற்று
அதிகாரத்திலிருந்தவர்கள் மரணம் வரைக்கும் தான் அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.அதற்காக எதை வேண்டுமென்றாலும் இழப்பார்கள் இது வரலாறுகளாகிப் போன கதைகள்
இன்று அதிகாரமிழந்து காணப்படும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா நெருப்புக்குள் விழுந்த புழுப் போல் துடியாய் துடித்துக் கொண்டு கொழு்பிலுள்ள அமைச்சின் கதவுகளை பல மாதங்களாக தட்டி வருகின்றார்.
ஒரு வருட கால முயற்சிக்கு கையில் பலம் கிட்டியுள்ளது அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்வின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராக அதாஉல்லாவை இணைக்க இணங்கியுள்ளதாக அறிய முடிகிறது.
அதாஉல்லா இணைப்பாளர் என்ற செய்தி கேட்டு அவரின் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் பட்டாசுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அப்படி அதாஉல்லாவுக்கு .இணைப்பாளர் பதவியை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அம்பாரை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் இழக்க நேரிடும் என அவரின் ஆதரவாளர்கள் சந்தோசத்துடன் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் அணியினர் தீவிர யோசனையில் இருந்து வருகின்றனர்