News Update :

Monday, April 17, 2017

TamilLetter

ரஜினிகாந்தின் மனைவி லதா புகார் ; பிச்சைக்காரர்கள் அதிரடி கைது!


சென்னையில் சாலையோரங்களில் பிச்சை எடுப்பவர்கள், சாலை சமிக்ஞை விளக்குகளிலும் பிச்சை கேட்பவர்கள் என்று  34 சிறுவர், சிறுமிகள் உள்பட 163 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 129 பேர் பெரியவர்கள். 
நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் முதியோர்கள் 56 பேரும், 25 பேர்  சிறுவர், சிறுமிகளும் காப்பகத்தில்  சேர்க்கப்பட்டனர்.   காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்களின்   ஊர், பெற்றோர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்களைப் பிச்சையெடுக்கப் பயன்படுத்தியவர்கள் யார் என்ற பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 
இத்தகைய திடீர் சோதனைக்கு  ரஜினிகாந்தின் மனைவி லதாவும் , எக்ஸ்னோரா எம்.பி. நிர்மலும் தான் காரணம் . 
முன்தினம் சென்னையில் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் காணாமல் போன  2 குழந்தைகளைக் கண்டுபிடிக்கும்படி இவ்விருவரும்  போலீஸ் ஆணையத்திடம்  புகார் அளித்ததில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்  உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போதுதான் கடத்தப்பட்டக் குழைந்தைகள் பிச்சை எடுக்கவிடப்பட்டு இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் பேரில் இவ்வித சோதனை நடத்தப்பட்டது. 
இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் "குழந்தைகள் கடத்தல் "வழக்கை விசாரணையின்போது, தமிழகம் முழுவதும் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு விசாரணை நாளை (18-ந்தேதி) மீண்டும் நடைபெறுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-