போராளி பாரின்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிப்பதோடு புதிய திட்டங்களை ஆரம்பித்து வைக்கின்ற பிரமாண்டமான பல நிகழ்வுகள் அம்பார மாவட்டத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நகர திட்டமிடல்,நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சு,மத்திய சுகாதார அமைச்சு,மாகாண சுகாதார அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் நிதியொதுக்கிட்டில் மூலமே இத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..
இத் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் தனது கட்சித் தலைமையின் பங்குபற்றுதலுடன் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளையில் தலைரை பொருட்படுத்தாமல் தமது கட்சிக்கு எதிரான சதி வலைகளை செய்துவரும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிகழ்வுக்கு முக்கியத்தவம் கொடுத்துள்ளா்.
இதன் மூலம் தனது கட்சி தலைமையைவிட ஹிஸ்புல்லாவையே ஜவாத் பெரிதும் மதிக்கின்றார் என்பது புலனாகிறது.
.ஒரு நிகழ்வுக்கு அழைக்கப்படும் போது அந்த நிகழ்வில் கலந்து கொள்வது நாகரிகமான விடயமாக இருந்தாலும் தனது கட்சியின் தலைமை தனது சொந்த மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல நிகழ்வுகளை நடாத்தும் போது அதற்கு ஒத்தாசை வழங்காமல் மாற்று கட்சியின் நிகழ்வில் கலந்து கொள்வது எவ்வளவு துரோகத்தனம்.இதை கட்சியின் அடிமட்ட போராளிக்ள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
எனவே இதற்கெதிராக கட்சி மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உண்மையான கட்சிப் போராளிகள் தலைவரை கேட்டுக் கொள்கின்றனர்.