News Update :

Saturday, April 15, 2017

TamilLetter

அரையிறுதிப் போட்டியில் ஹிஜ்ரா கழகத்தை துவைத்து தொங்க விட்ட ஏ.கே.பி அணி

சுஜாத்



அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகம் ஏறபாடு செய்த மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி அக்கரைப்பற்று முதல்வர் தவம் விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு(15)இடம் பெற்றது.

 ஏ.கே.பி  மற்றும் ஹிஜ்ரா அணிகள் பலத்த எதிர்பார்ப்புடன் அரையிறுதிப் போட்டியில் கால் பதித்தன.

ஏ.கே.பி அணியின் முன்கள வீரர்களான மாஜீத்,அர்ஸாம் மற்றும் அறுாஸ் ஆகியோரின் அபார திறமையை கட்டுப்படுத்த முடியாமல்   ஹிஜ்ரா அணியினர் நிலை குலைந்தனர்.

ஹிஜ்ரா அணியின் ஆதர்வாளர்களின் ஆரவராங்கள் வானை கிழித்துக் கொண்டு இருந்த வேளையில் போட்டியின் 14வது நிமிடத்தில்   ஏ.கே.பி அணியின் முன்கள வீரா் மாஜீத் முதலாவது கோலை போட்டு ஹிஜ்ரா அணி ஆதரவாளர்களின் ஆரவாரங்களை   மௌனப்படுத்தினார்.

இதன் அடிப்படையில் போட்டி முடிவின் போது மூன்றுக்கு ஒன்று என்ற வீதத்தில் ஏ.கே.பி அணி ஹிஜ்ரா அணியை படு தோல்வியடைய வைத்தது.  

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-