News Update :

Monday, April 24, 2017

TamilLetter

சாய்ந்தமருதில் கோலாகலமாக இடம்பெற்ற 'கிராமிய விளையாட்டு விழா''





(றியாத் ஏ. மஜீத்)
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் 'கிராமிய விளையாட்டு விழா'  பௌசி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா  விசேட அதிதியாக சட்டம்  ஒழுங்கு மற்றும் தென் மாகாண அமைச்சின் மேலத் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்  கௌரவ அதிதிகளாக எஸ்.றிபாயா எம்.ஜுனைதா  உதவி முகாமையாளர்களான ஏ.எம்.எம்.றியாத்   எம்.யூ.ஹில்மி மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம.மன்சூர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிராமிய விளையாட்டுக்களான சாக்கோட்டம்இ பலூன் உடைத்தல்இ சங்கீத கதிரைஇ யானைக்கு கண் வைத்தல்இ முட்டி உடைத்தல்இ ஓலை பிண்ணுதல்இ மெதுவான சைக்கிள் ஓட்டம் என சுவராஸ்யமான போட்டிகள் இடம்பெற்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-