சமீம் காத்தான்குடி
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று விடும் என பயந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அதை தடுத்து நிறுததினார்.
2008ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா முதலமைச்சர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் அறிவிக்கப்பட்டிருந்தார்..
இதை பெரிதும் நம்பிய மக்கள் ஹிஸ்புல்லா முதலமைச்சராக வரப் போகின்றார் என்று கனிசமான வாக்குகளை வெற்றிலைச் சின்னத்திற்கு அள்ளி வழங்கினர்.
முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய அதி கூடிய ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றனர்.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முதலமைச்சராக ஹிஸ்புல்லாவை நியமிப்பதில் சிறிய மயக்க நிலை தோன்றியது.ஜனாதிபதியின் நோக்கத்தை நன்கு அறிந்த அதாஉல்லா மஹிந்தவின் தடுமாற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்து ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என கணக்குப் போட்டார்.
அதாஉல்லாவின் அந்த கணக்கின்படி பிள்ளையானை முதலமைச்சராக நியமிப்பதன் மூலம் தமிழர்களின் ஆதரவை பெறமுடியும் என மஹிந்தவிடம் கூறினார்.
ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிப்பேன் என மக்கள் முன் வாக்ளிகுறுதியளித்திருந்தார். இதை மீற முடியாத மஹிந்தவுக்கு அதாஉல்லாவின் ஆலோசனை பெரும் பலமாக அமைந்தது.
உடனடியாக ஹிஸ்புல்லாவை அழைத்த மஹிந்த. உங்களை முதலமைச்சராக நியமிக்கவுள்ளேன் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் சம்மதக் கடிதத்தை பெற்று வாருங்கள் என்றார்.
ஹிஸ்புல்லா மிகுந்த சந்தோசத்துடன் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களிடம் சம்மதக் கடிதத்தை கோரினார். அப்போது அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஹிஸ்புல்லா முதலமைச்சராக நியமிப்பதற்கான சம்மதக் கடிதத்தை வழங்க மறுத்துவிட்டனர்.
எதிர்பாராத்து சென்ற ஹிஸ்புல்லாவுக்கு 5 முஸ்லிம் உறுப்பினர்கள் மாத்திரமே சம்மதக் கடிதத்தை வழங்கியிருந்தனர்.இது தொடர்பாக மஹிந்தவிடம் முறையிட்ட போது முஸ்லிம் உறுப்பினர்கள் உங்களை ஆதரிக்க முன்வராமல் எப்படி நான் உங்களை முதலமைச்சராக்குவது என பதிலளித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதியிடமிருந்து இப்படியொரு வார்த்தை வரும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத ஹிஸ்புல்லா ஏமாற்றத்துடன் திரும்பி வந்து ஊடகங்கள் மூலம் அதாஉல்லாவி்ன் கபட நாடகத்தை மக்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதாஉல்லா அன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வரக் கூடாது என சதி செய்தாரோ.அதே ஹிஸ்புல்லாவிடம் மடிப்பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.- இறைவன் போதுமானவன்