காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தாய் மற்றும் மகனுக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்க சங்கிலி கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மஹஓய காவற்துறை அதிகாரிகள் சிலர் நேற்று இரவு சமகிபுர பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது கொள்ளையர்கள் காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டதாக மஹஒய காவற்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது காவற்துறை அதிகாரியொருவரிடம் இருந்து கொள்ளையர் ஒருவர் தப்பிச் செல்ல போராடிய போது காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.
இதனால் கொள்ளையர் மற்றும் அவரின் தாயுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர்கள் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.