News Update :

Tuesday, April 18, 2017

TamilLetter

கோணவத்தையில் றியாஸ் அதிபரின் மற்றுமொறு சாதனை



பாரீஸ் முகம்மட்
அட்டாளைச்சேனை கோணவத்தை பிரதேச இளைஞர்களை சிறந்த ஆளுமைமிக்கவர்களாக  மிளீர வைக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.அதிபர் ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் .

அதன் அடிப்படையில் கடற்கரை ஓரத்தில் விளையாட்டு மைதானங்கள்      அமைக்கப்படுவதன் மூலம் அச் சமூகம்  சமூக மாற்றத்தில் பல பங்களிப்பை வெளிப்படுத்தும் என்பதை உணர்ந்து அவ் இலக்கை அடைவதற்காக    பல போராட்டங்களை  செய்து  அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இப்படியான நிலையில் அமைக்கப்பட்ட    இவ் மைதானங்களை அரசாங்கத்தின் பொது மைதானங்களாக மாற்றப்படுவதன் மூலமே இவ் மைதானங்கள்  பாரிய அபிவிருத்தியை அடைய முடியுமென்பதை விளையாட்டு வீரர்களும் பொது மக்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற(18)   அட்டளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் பிரதேச ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான  எம்.எஸ் உதுமாலெப்பையின் தலைமையில் இடம்பெற்றது.இதன் போதே   மாக்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக அதன் உறுப்பினர்களோடு இணைந்து  றியாஸ் அதிபரினால் பொது விளைாயட்டு மைதானமாக பிரகடணப்படுத்துமாறு  சபையில் பிரேரணை முன் வைக்கப்பட்டன.

இப் பிரேரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒருங்கிணைப்புக் குழு அட்டாளைச்சேனை 06ம் மற்றும் 08ம் பிரிவுகளிலுள்ள இரண்டு மைதானங்களை அட்டாளைச்சனை பொது விளையாட்டு மைதானங்களாக அங்கிகரித்தது.

இதன் மூலம் இவ் மைதானங்கள் எதிர்காலத்தில் அரசாங்க நிதியுதவியுடன் பாரிய அபிவிருத்தி எட்ட முடியும்.

இப் பிரதேசத்தில் எத்தனையோ அரசியல் வாதிகள் இருந்த போதும் தனி மனிதனாக இப் பிரதேசத்தின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வரும் அதிபர் றியாஸ் அவரகளுக்கு விளையாட்டு வீரா்களும் சமூக ஆர்வலர்களும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

இத் தீர்மானத்தை எடுக்க உதவிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்இஉதுமாலெப்பை,பிரதேச செயலாளர் அதிசயராஜா,திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் அதிபர் றியாஸ் அவர்கள்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-