News Update :

Sunday, April 30, 2017

TamilLetter

அக்கரைப்பற்றில் இடம்பெற்று வரும் மேதினக் கூட்டம்


அக்கரைப்பற்றில் இடம்பெற்று வரும்  மேதினக் கூட்டம்
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகிறது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்று வரும் மே தின நிகழ்வுகளில் ஜனநாயக சோசலிச குடியரசின் எதிர்க்கட்சி தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் கூட்டணிக்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்- இலங்கை திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம்- சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம்- தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கூட்டமைப்பின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-