யு.எல். றஸ்மி
இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் அதிகமான மக்கள் உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற கந்துாரி நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு பரிமாறப்பட்ட உணவை உடகொண்டதன் மூலமே இவ் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பாதிப்புக்குள்ளான மக்கள் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியரே கடடையில் ஈடுபட்டுள்ளதால் அதிகமான நோயாளர்களுக்கு வைத்திய உதவி மேற் கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை கேள்விப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் மேலதிகமான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.