News Update :

Sunday, April 30, 2017

TamilLetter

தோல்வியிலும் அதாஉல்லா பாடம் படிக்கவில்லை – இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்



பல தசாப்த காலங்களுக்குப் பிறகு இறக்காமம் பிரதேசத்தின் நலன்களில் அக்கரைப்பற்று மக்கள் இணைந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கின்றது என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி தெரிவித்தார்.

இறக்காமமும் அக்கரைப்பற்றும் தொப்புல்கொடி உறவானது.எந்த ஒரு சிறு விடயமாகயிருந்தாலும் இரண்டு ஊர்களுமே பேசி கலந்துரையாடிய வரலாறு இருந்தே  வந்துள்ளது. ஒருவரை ஒருவர் சார்ந்தே வரத்தகம், கல்வி, விளையாட்டு என பல்வேறு  துறையிலும் இணைந்தே பயனித்தனர்.அது மட்டுமல்லாமல் அதிக திருமணங்கள் இந்த இரண்டு ஊரையும் இணைப்பதற்கு பிரதான பாத்திரமாகவும்  அமைந்திருந்தது.

இப்படியான காலகட்டத்தின் போதுதான் அதாஉல்லாவின் அரசியல் வருகை  இரண்டு ஊர்களின் உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தியது.

சமூக அரசியலிருந்து தனிப்பட்ட சுயநலங்களுக்காக அதாஉல்லா பேரினவாத சக்திகளின்  கைக் கூலியாக மாறியதன் மூலம் அது இன்னும் விரிவடைந்தது.

அதாஉல்லா எனும் ஒரு தனிமனிதனின் செயற்பாடால் இரண்டு பிரதேசங்களுமே நேரடியான   முரண்பாடுகளை சந்தித்த சந்தர்ப்பங்கள் அதிகமாகவே தோன்றியது.

இச் சந்தர்ப்பத்தில்தான் இதற்கு மாற்றமாக      ஏ.எல்.தவம் அவர்களின் அரசியல் பிரவேசம் முஸ்லிம் சமூகம் சார்ந்ததாகவே காணப்பட்டது. இதற்கு வலுச் சேர்க்கும் முகமாகவே  அணமையில் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் வழிகாட்டலில்  ஒன்று கூடிய அக்கரைப்பற்று மக்கள் இறக்காமம் தற்போது எதிர்நோக்கியுள்ள புத்தர் சிலை பிரச்சினைக்கு எதிராக தமது கண்டன ஆரப்பாட்டத்தை நடாத்தினர்.

.இது வரலாறு அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கும் ஒரு மாகாண சபை உறுப்பினர் கடும் போக்கு பேரினவாத  சக்திகளுக்கு    எதிராக தனது சமூகத்திற்காக நேரடியாக போராட்டத்தில் பங்குபற்றியது இலகுவான காரியமல்ல.இதற்காகவே மாகாண சபை உறுப்பினர் தவத்தை எமது பிரதேசம் ந்னறியுடன் பார்க்கின்றது.

சமூகத்தில் தோன்றியுள்ள இப் பாரிய பிரச்சினையை இன்னும் உணராத முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சமூக  போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள அக்கரைப்பற்று மக்களை தனது ஆதரவாளர்களைக் கொண்டு தடுப்பதற்கு முயற்சி செய்தார்.அது முடியாமல் போகவே இவ் ஆர்ப்பாட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றார்.

இருந்த போதும் மக்கள் அவரின் பதவி மோகத்தை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டுள்ளனர்.தோல்வியில் கூட இன்னும் அதாஉல்லா  பாடம் படிக்கவில்லை.

ஆகவே எமது சமூக பிரச்சினைக்கு ஆதரவாக செயற்பட்ட அக்கரைப்பற்றுஇ கல்முனைஇபொத்துவில் பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.என்றார் முன்னாள் தவிசாளர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-