கொலொன்னாவை – மீதொட்டுமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததினால் அருகில் இருந்த 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குப்பைமேடு சரிந்ததினால் அருகில் இருந்த தொடர் குடியிருப்பொன்று அகப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் சிக்கியுள்ள நபர்களை பாதுகாப்பதற்கு காவற்துறை மற்றும் முப்படைகளின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுவரையில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் ஆபத்துக்கள் தொடர்பில் இதுவரையில் அறியப்படவில்லை.