முஸம்மில்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்களுக்கு உரிமை கோரும் அக்கரைப்பற்றின் முன்னாள் மாநகர சபை எதிர்க்கட்டசி தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனிக்கு அக்கரைப்பற்று பறக்கத் நகர் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று 6ம் கட்டையில் அமைந்துள்ள சிறிய கிராமமான பறக்கத் நகர் மக்கள் மிக நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இப் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு நீர் வடிகாலமைபு சபையின் ஊழியரான குத்துாஸ் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கிமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து உடனடியாக பத்து இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்து குறித்த வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இப்படியான சந்தர்ப்பத்தில் முன்னாள் அக்கரைப்பற்று எதிர்க்கட்சித் தலைவர் தான் முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் என்றும் தன்னால்தான் இவ் வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்றது என்றும் மக்கள் மத்தியில் போலியான பிரச்சாரங்களை மேற் கொண்டு வருகின்றார்.
முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு கலைக்கப்பட்டு செயல் இழந்து காணப்படுகின்ற இந் நிலையில் இவர் அமைப்பாளர் என்று மக்கள் மத்தியில் கூறிவருகின்றார்.
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹஸனலியோடு இணைநது தலைவருக்கு எதிராக சதி செய்தார் எனும் குற்றச்சாட்டில் தலைவரால் ஹனிபா மதனி துாரமாக்கப்பட்டுள்ளார்.அத்தோடு கட்சியின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளும் எந்த வேலைத் திட்டங்களிலும் இவருக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.
இப்படியான நிலவரத்தில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களை தான்தான் முன்னின்று செய்வதாக கூறுவதால் உண்மையாக மக்கள் பணி செய்யும் நபர்கள் இப் பணியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதனால்.அம் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் எந்தவித பங்களிப்பும் செய்யாத ஹனிபா மதனிக்கு எதிராக இன்று பறக்கத் நகர் மக்கள் அணிதிரண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர்