News Update :

Wednesday, April 12, 2017

TamilLetter

பொத்துவில் பிரதேச கல்வியின் உண்மை நிலை - தவம் வாய் திறந்தார்

அலிகார் 

ஒரு பிரதேசத்தின் கல்வியை தடுத்து இன்னொறு பிரதேசம் கல்வியால் முன்னேற முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச   இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை  வழங்கி வைத்து உரையாற்றும் போதே    இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் தவம் தொடர்ந்து உரையாற்றுகைளில் பொத்துவிலுக்கு ஆசிரியர் வராமல் தடுப்பதாக சுதந்திரக் கட்சி அமைப்பாளர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் எதிரிகள் என்மீது பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்..

அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை பட்டம் பதவிகளை இறைவன்தான் வழங்குகிறான்.அதை தெளிவாக புரிந்து கொண்டதனால் நான் ஒரு போதும் பதட்டமடைவதில்லை.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்களை நான் ஒரு போதும் தடுத்ததில்லை அப்படியான தேவை எனக்கில்லை ஆனால் அப்படி அனுப்பப்டும் ஆசிரியர்கள் தரமானவா்களாக இருக்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு.பெயருக்காக ஆசிரியர்களை அனுப்புவதால் பொத்துவிலின் கல்வி மாற்றமடையப் போவதில்லை

அக்கரைப்பற்று வலயக் கல்வி அதிகாரிகள் 60 வீதமான பெண்களையும் 40 வீதமான  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவர்களையும் தான் பொத்துவிலுக்கு அனுப்புவதற்கு பட்டியல் தயாரித்தனர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளரான பிரதிக் கலவிப் பணிப்பாளர் இதற்கு   உடந்தையாக இருந்தார்.இப் போது அவரை சம்மாந்துறைக்கு துாக்கியெறிந்துள்ளேன்.

நான் கூறியதெல்லாம் குறைந்த வயதுடைய எத்தனை  ஆசிரியர்கள் வேண்டுமென்றாலும்   பொததவிலுக்கு அனுப்புங்கள் நான் அதில தலையிட மாட்டேன்.என்று

குழந்தைகள் இருக்கின்ற பெண் ஆசிரியர்களை அனுப்புவதால் அவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் அத்தோடு குழந்தை பெறும் காலங்களில் விடுமுறையில் சென்று விடுவார்கள் அடிக்கடி வேறு காரணத்திற்காக விடுமுறை எடுப்பார்கள் இதனால் பொத்துவில் மாணவர்களின் கல்வி எப்படி முன்னேரும் என நான் கல்வி அதிகாரிகளிடம்   கேள்வி கேட்டேன்.

நான் சொல்லும்    காரணங்களால்    அதாஉல்லாவின் ஆதரவான ஆசிரியர்கள்தான் பொத்துவிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்துவதற்காகவே  என்மீது அந்தப்   பழியை போட்டுள்ளனர்.

எனது கூடப் பிறந்த சகோதரி அட்டாளைச்சேனை அல்- முனிறா பாடசாலையில்   பல வருடங்காளாக ஆசிரயராக் கடமையாற்றி வருகின்றார்.அவர் தொடர்ந்து அக்கரைப்பற்றுக்கு மாற்றுமாறு கூறிக் கொண்டு இருக்கிறார்.நான் இதுவரையும் அவரை அட்டாளைச்சேனையிலிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.அத்தோடு உங்கள் பாடசாலையான பொத்துவில் கவிவாணன் எம்.ஏ.அஸீஸ் பாடசாலையில் எனது சகோதிரின் மகளான   எம்.எம்.பாத்திமா சஜீகா ஆசிரியராக கடமை புரிகின்றார் அவரைக் கூட நான் அக்கரைப்பற்றுக்கு  மாற்றம் செய்யவில்லை இப்படியான நிலையில் இருக்கும் எனக்கு எதிராக பொய்ப பிரச்சாரங்களை பரப்புகின்றனர்.

எனது மகள் கல்வி கற்றும் ஜீனியர் அஸ்ஸிறாஜ் வித்தியாலயத்தில் கல்வி  கற்பிக்க ஆசிரியர் இல்லாமல் ஒவ்வொறு முறையும் என்னிடம் பெற்றோர் என்ற  முறையில் கோரிக்கை விடுகின்றனர்.அதைக் கூட ன்னால் செய்ய முடியாமல் உள்ளது.

சேவ லங்கா மஜீத் முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயகா அவர்களின் செல்லப் பிள்ளையாக இருந்தார்.ஏன் அவரால் அமைச்சரவைப் பத்திரம் கூட சமர்ப்பிக்க முடியாமல் போனது.பொத்துவில் உப வலயத்திற்கான உத்தியோக புர்வமான கடித்தை கூட அவரால்  அப்போது  பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது.இந்த வாரம்தான் அதற்கான உத்தியோகபுர்வ கடிதம் வழங்கி கை்கப்பட்டது.

எனவே முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மிகவும் கவணமாக இருக்க வேண்டும்.மஹிந்த ஆட்சியில் அதிகாரத்திலிருந்த உதுமாலெப்பை,சேவலங்கா மஜீத் ஆகியோர் பொத்துவிலின் கல்விக்கு எதையுமே செய்யாமல் இப்போது பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதன் காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-