தேர்தல்கள் வரும் போது
குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் என பொத்துவில் மக்களைப் பார்த்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
முஸ்லிம் காங்கிரஸின் பொதுக் கூட்டம் நேற்றிரவு (01) பொத்துவில் பிரதான வீதியில் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் இடம் பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
ஜவாத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தேர்தல் காலங்கள் வந்தால் பொத்துவில் பிரதேச மக்கள் பல குழுக்களாக பிரிந்து வேட்பாளர்களிடம் பணம் பெற்று விட்டுத்தான் வாக்களித்துள்ளீர்கள்.அந்த நேரம் யார் சிறந்தவர்,யார் திறமையானவர்,யார் சமூகத்திற்கு பொருத்தமானர் என்பதை கவனத்தில் கொண்டு வாக்களிக்காமல் விட்டுவிட்டு பிறகு வந்து ஊரை முன்னேற்ற வேண்டுமென்று கூச்சல் போடுவது எந்த விதத்தில் நியாயம் என கேட்கிறேன்.
எங்கள் கட்சிக் காரர்களிடம் பிழைகள் இருந்தால் நேரடியாக இளைஞர்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் வந்து கேட்கலாம் நாங்கள் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.அப்படி நாங்கள் பிழை செய்திருந்தால் அதை திருத்திக் கொள்வதற்கும் நீங்கள் பிழை செய்திருந்தால் அதை விளங்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும்.
கூச்சல் குழப்பங்கள் இடுவதும் கல் எறிவதும் அறிவு ரீதியான செயற்படா? கல்முனையானை தாக்கினால் கல்முனை ஊரான் பொத்துவிலானை தாக்க முற்படுவான் இதனால் ஊர் கலவரம்தான் ஏற்படும் என்றார்.
இதன் போது எமது செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருத்தர் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கும் இதே செயற்பாட்டைத்தான்
பொத்துவில் மக்கள் செய்தனர்.அத்தோடு மறைந்த தலைவர் தனது எம்.பி பதியை இராஜினமா செய்வதற்கும் பொத்துவில் மக்கள்தான் காரணமாக இருந்தார்கள்.
பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து அஷ்ரபை தோற்றடித்தவர்கள் பொத்துவில் மக்களே அப்படிப்பட்டவர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிய விடயமல்ல.
அதாஉல்லாவின் ஆதரவாளர் ஒருத்தர்
கருத்து தெரிவிக்கையில் பொத்துவில் மக்களின் மனநிலை எப்போதும் இப்படித்தான்.முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை பொத்துவிலுக்கு வரக் கூடாது என்று வீதியை மறித்து கல் எறிந்து கூக்கிரலிட்டார்கள்,விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியே நாங்கள் அந்த ஊரை விட்டு வெளியேறினோம்.
இப்படியான வரலாறுகள் ஒரு போதும் பொத்துவிலின் நன்மதிப்பை பெற்றுத்தராது என இன்னும் ஒருத்தர் தெரிவித்தார்.