News Update :

Saturday, April 22, 2017

TamilLetter

மாகாண சபை உறுப்பினர் தவத்தைப்பற்றி அஸ்-ஸிறாஜ் கல்லுாரியின் அதிபர் ஏன் அப்படி கூறினார்.








ஒரு தசாப்த காலத்திற்கு பிற்பாடு அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் ஒரு வரலாற்றை துவக்கி வைக்கின்றது என அதன் அதிபர் றபாய்தீன் தெரிவித்தார்.

அஸ்-ஸிறாஜ் மாகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று(22)  கல்லுாரி மைதானத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும்  போதே இவ்வாறு அதிபர் தெரிவித்தார.

அதிபர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஒரு தசாப்த காலமாக இ்ப் பாடசாலையில் இப்படியான விளையாட்டு விழா நடைபெறவில்லை.இதற்கு பல காரணங்கள் இருந்த போதும் முக்கியமான காரணமாக விளையாட்டு மைதானத்தின் நிலையே.

பாம்பு,தவளை,புராண் வசித்து வந்த இவ் சதுப்பு நிலத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் நிதியில்  மைதானமாக மாற்றி தந்துள்ளார்.அதன் பயனாகவே இன்று இவ் விளையாட்டு விழாவில் நுாற்றுக் கணக்கான மாணவர்களும்  ஆயிரக்  கணக்கான மக்களும்  கலந்து கொண்டுள்ளனர்.

இப் பாரிய சேவையை செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களுக்கு இப் பாடசாலை மாத்திரமல்ல இந்தப் பிராந்தியமே நன்றி கூற கடமைப்பட்டுள்ளது..

இவ்  விளையாட்டு விழாவை நடாத்தியதன் மூலம் மாணவர்கள் தங்களது திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளார்கள் அவர்களையும் நான்   பாராட்டுகிறேன்.என்றார் அதிபர்.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-