News Update :

Friday, April 7, 2017

TamilLetter

சிரியா மீதான அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல்



இவ்வாரம் இடம்பெற்ற சிரியா மீதான அமெரிக்காவின்  ஏவுகணை தாக்குதல் குறித்து கனடா அதிகமாக தெரிவிக்க வேண்டியுள்ளதென கனடிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளர்.இத்தாக்குதலில் 80-மக்கள் கொல்லப்பட்டனர்.
வியாழக்கிழமை மாலை மத்திய சிரியாவில் அரச கட்டுப்பாட்டு விமான தளத்தை நோக்கி போர்க்கப்பல்களிலிருந்து யு.எஸ்.கிட்டத்தட்ட 60- ஏவுகணைகளை வீசியுள்ளது.


கனடிய படைகள் பணியாளர்கள் இந்த ஏவுகணை தாக்குதலில் சம்பந்தப்படவில்லை என ஒட்டாவா தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


சிரிய குடிமக்களிற்கு எதிராக இடம்பெறும் இரசாயன ஆயுதங்களின் தாக்குதலை கனடா தொடர்ந்து வலிமையாக கண்டிக்கும் என இது தொடர்பாக குளோபல் விவகார பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளை நிறுத்தும் முயற்சிகளில் கனடா ஆதரவாக இருக்கும் எனவும் அறிக்கை தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.


பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ யு.எஸ். ஏவுகணை தாக்குதல் குறித்த அதிகார பூர்வமான பிரதிபலிப்பை இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் வியாழக்கிழமை சந்தேகத்திற்கிடமான இக்கொடிய விஷவாயு தாக்குதல் நடாத்தப்பட்டது குறித்த பயங்கரததை வெளிப்படுத்தியுள்ளார்.


இது ஒரு போர் குற்றம்.சர்வதேச சமூகம் இத்தகைய செய்கைகளிற்கெதிராக உறுதியாக நிற்க வேண்டும் என நியு யோர்க்கில் இடம்பெற்ற ஒரு நாள் கூட்டமொன்றில் கூறினார்.


இரசாயன தாக்குதல் புரிந்தவர்களை கனடா தலையிட்டு ஐக்கிய நாடுகள் சபை இச்செய்கையை விசாரனை செய்து தண்டிக்கும் முயற்சியில் கனடா தலையிடும் எனவும் ஆனால் சிரிய இரும்பு மனிதன் பஷார் அசாட்டை அகற்ற கனடாவின் பங்கு குறித்த சிறிய குறிப்பொன்றையும் வழங்கியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-