News Update :

Saturday, April 15, 2017

TamilLetter

அன்வர்தினை பின்னுக்குத் தள்ளும் அதாஉல்லா

இர்பான்
அக்கரைப்பற்றில்  உள்ள சில அரசியல் வாதிகளுக்கு  ஒருவித நோய் கொஞ்ச  மாதங்களாக பிடித்து உள்ளது. ஜனாதிபதி ஊருக்கு வந்ததை உரிமை கோருவது.யாராவது   ஒரு   அமைச்சரை  அழைத்து வந்து செயல் வீரன் என்று சொல்வது  செல்பி எடுப்பது என பல்வேறு கோமாளித்தனமான அரசியலை   அரங்கேற்றுகின்றனர்.

 சமூர்த்தி அமைச்சின்  மூலம்   வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப் போராராம் பட்டாதரிகளுக்கு தொழில் வழங்கப் போகின்றாராம்.பதவியில்லாட்டியும் செயல் வீரனாம்.

அன்வர்தீன் அக்கரைப்பற்றுக்கு முஸ்லிம் கலாச்சார அமைச்சரை கூட்டிக் கொண்டு வந்தார்.ஜனாதிபதியை கூட்டிக் கொண்டு வந்தார். சுகாதார அமைச்சர் ராஜீதயை கூட்டிக் கொண்டு வந்தார். கொங்ரீட் வீதி போடுகிறார் இதெல்லாம் ஒரு வருடத்திற்கு மேலாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அன்வர்தீன் செயகின்ற வேலைகை்கு போட்டியாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதன் மர்மம் என்ன?

அன்வரதீன்  வளர்ந்து வரும் இளம் அரசியல் வாதி அவரை தட்டி    விடுவது  வயது முதிர்ந்த அரசியலில் ஒய்வு பெற்ற ஒருவரின் பன்பு.ஆனால் அன்வர்தீனின் வளர்ச்சியை தடுக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

அக்கரைப்பற்றின் மாநகர சபையின் மேயராக அன்வர்தீன் வந்தால் தன் மகனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தினால்தான் அன்வர்தீனுக்கு எதிரான செயற்பாடுகளில் அதாஉல்லா  இறங்கியுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-