News Update :

Tuesday, April 25, 2017

TamilLetter

அமெரிக்க போர்க்கப்பல் விரைந்தது! வெடிக்கிறது போர்!


வடகொரியா நிறுவனர் பிறந்தநாளையொட்டி அந்நாடு பல்வேறு போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு தனது பலத்தை பறைசாற்றியது.
அந்நாடு அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடவும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வடகொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்க விமானம் தாங்கிய போர்க்கப்பலான USS Carl Vinson கப்பலை கொரிய கடற்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த கப்பல் மூலம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு வீரர்கள் இணைந்து, வடகொரியா அருகே போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.
இதனை வடகொரியா கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்க போர்க் கப்பலை கடலில் அழித்து மூழ்கடிப்போம் என வடகொரியா ஆளும் கட்சியின் செய்தி ஏடான Rodong Sinmun எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு தரப்பினரும் அமைதி காக்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன அதிபர் ஜி ஜிங்பிங் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இதனை வலியுறுத்தினார்.
இருப்பினும் எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. சீனாவின் நீண்ட கால தோழனான வடகொரியா, சீனாவின் கோரிக்கை ஏற்குமா அல்லது தாக்குதல் நடத்துமா என்பது சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-