News Update :

Monday, April 3, 2017

TamilLetter

நான்கு ஏக்கருக்குள் முடங்கிப் போன முடக் குதிரை அதாஉல்லா - முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி



பாறுக் ஜமால் -

எத்தனை வகையாக வசை பாடினாலும் இழந்த அதிகாரத்தை அதாஉல்லாவால் பெற முடியாது.அப்படி அதிகாரம் பெற வேண்டுமென்றால் ரவுப் ஹக்கிமின் கால்களில் விழுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி தெரிவித்தார்.
இறக்காமம் பிரதேச மக்களுக்கான இலவச குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மஹிந்தவின் முஸ்லிம் விரோத செயற்பாட்டிற்கு ஊது குழலாக செயற்பட்ட அதாஉல்லா இன்று மஸ்லிம்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்.அன்று கிரஸ்மேன் என்று முஸ்லிம் தாய்மார்கள் அழுது நடுங்கிய போது இரவில் வரும் கள்ள பருஷர்கள் என்று கேவலப்படுத்தினார்.பள்ளி உடைக்கப்பட்ட போது நபி அவர்களின் காலத்திலும் உடைக்கப்பட்டதுதானே என்றார்.அளுத்கமை பற்றி எரிந்த போது இங்கு எழுவான் சோலையில   இசைக் கச்சேரி நடாத்திக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மறப்பதற்கு நாங்கள் ஒன்றும் மானம் கெட்டவர்கள் அல்ல.

2008ம் ஆண்டு கிழக்கின் முதலமைச்சராக காத்தான்குடி ஹஸ்புல்லா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதாஉல்லா இன்று ஹஸ்புல்லாவின் கால்களில் விழுந்து அதிகாரத்திற்கு வருவதற்கு உதவி கேட்டுள்ளார்.
தேசியத் தலைவர் என்று தன்னைத்தானே புகழ்ந்த அதாஉல்லா வெறும் 15 ஆயிரம் வாக்குகளே பெற்றார்.பபிரபாகரன் நந்திக் கடலில் சுறுங்கி மாதிரி அக்கரைப்பற்றுக்குள் சுறுங்கிவிட்டார்.
இப்போது அக்கரைப்பற்றிலும் நான்கு ஏக்கருக்குள்ளே வாழ்ந்து வருகின்றார்.

அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக திட்டித் தீர்க்கிறார்.ரிஷாட்டின் கட்சி இருக்கும்வரை வெளியுர் வாக்குகளை பெற முடியாது என கணக்குப்  போடுகிறார்.

அதாஉல்லாவிற்கு இருக்கும் ஒரே தெரிவு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடம் சரணடைவது என தெரிவித்தார் முன்னாள் தவிசாளர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-