News Update :

Wednesday, April 26, 2017

TamilLetter

சின்ன பொறிகூட போராய் வெடிக்கும்! அமெரிக்கா- வடகொரியா மூர்க்கம்!


ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட போர் மூண்டுவிடும் என்ற ஆபத்தான கட்டத்தை அமெரிக்காவும் வட கொரியாவும் எட்டிவிட்டன.
அமெரிக்கா தனது போர்க் கப்பல்களையும் விமானந்தாங்கிக் கப்பல்களையும் வட கொரியாவை நோக்கி அனுப்பியுள்ளது. அதற்கு தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மாபெரும் போர்ப் பயிற்சியை வடகொரியா நடத்தியது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்தப் போர் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டதா? அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு வட கொரியத்தலைவர் கிம் ஜோங் யுன்னை எப்படிச் சமாளிப்பது என்பதை கண்டறிய முடியாத சங்கடத்தில் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்குள் சிக்கியிருக்கிறது. 
இப்போது கொரிய வட்டாரத்தில் நிலவும் மோதல் நிலையானது எந்த நேரத்திலும் போர் வெடித்து விடும் என்பதையே காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு சின்னப் பொறி தெறித்தால் கூட தீப்பற்றிக் கொள்ளும் என்ற நிலையில் தற்போதைய சூழல் அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போர் மூண்டால் அது எல்லையற்ற சேதங்களுக்குக் காரணமாக அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா அனுப்பியிருக்கும் சில போர்க்கப்பல்கள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் கொரிய பகுதியை அடைந்துவிடும்.
அதேவேளையில் வட கொரியா தனது போர்ப் பயிற்சியின் போது ஆயிரக்கணக்கான பீரங்கிகளை அணிவகுக்கச் செய்தது. அவை உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டன. ஏவுகணைக் குண்டுகளும் பாய்ச்சப்பட்டன.
இதனிடையே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே சண்டை மூண்டால், தங்களின் குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயரச் செய்வது மீதான ஒத்திகைப் பயிற்சிகளை ஜப்பானும் தென்கொரியாவும் நடத்தின.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-