News Update :

Tuesday, April 11, 2017

TamilLetter

அதாஉல்லா வெறும் டம்மிபீஸ் - மாகாண சபை உறுப்பினர் தவம்


இன்று அதாவுல்லா இறக்காமத்திற்குப் போனாராம். இப்போது தான் அதிகாரம் இல்லாத ஒரு டம்மி பீஸ் என்பதால் - தனித்துப் போய் ஒருத்தரும் கணக்கெடுக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு - தன்னைப் போல தோற்று தேசியப்பட்டியல் பெற்று அமைச்சரான எஸ்.பி. திஸாநாயகவை கூட்டிக்குப் போனாராம்.
தன்னால் தற்போது ஒரு மண்ணும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டு - மற்றவர்களின் அதிகாரத்தைத்தான் தானும் நம்பியுள்ளேன் என்பதைக் காட்டியுள்ளார் அதாஉல்லா. அக்கரைப்பற்றில் போன வாரம் வீராப்பு பேசிய அதாஉல்லாவின் மாரப்பு விலகிய சம்பவம் இது.அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் - தனது கட்சியிலே என்னை வேட்பாளராக்கி போட்டியிட வைத்துவிட்டு - தனது மகனை மேயர் ஆக்குவதற்காக என்னைத் தோற்கடிக்க - தானே மேடைக்கு மேடை பகிரங்கமாகவும் இரகசியமாய்த் தனித்தனியாகவும் தவத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்ற அதாவுல்லாவை - அல்லாஹ் தண்டித்ததின் வெளிப்பாடுதான் - இன்று இறக்காமத்திற்கு டம்மி பீஸ் ஆக செல்ல வைத்தது.

என்னை அதிகாரம் இல்லாமல் ஆக்க நினைத்த அதாஉல்லாவும் மகனும் இப்போது அதிகாரம் இல்லாமல் அலைகின்றனர். அல்லாஹ் என்னிடம் அதிகாரத்தைத் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிகம் ஆடினால் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ் காட்டி விட்டான். எனக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

இது இப்படி இருக்க, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் என்னை தோற்கடிக்கவாம் என்று அவருடைய அல்லக்கைகள் சில கூறித்திரிகின்றன. உங்கள் தலைவர் மடிச்சிக்கட்டிக்கு நின்றுகூட தனது கட்சிலேயே போட்டியிட்ட தவத்தை மாநகர சபையில் தோற்கடிக்க முடியவில்லை - நீங்க எல்லாம் ஒரு சாமானா? அல்லாஹ்வைத் தவிர என்னை யாரும் தோற்கடிக்கவும் முடியாது - வெல்ல வைக்கவும் முடியாது அல்லக்கைகளே. அப்படி இல்லாமல் மாறி நடந்தால் அல்லாஹ்வின் குர்ஆன் வசனங்கள் பொய்த்துப் போய்விடும் அல்லக்கைகள்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-