பௌமி
ஒரு இரவில் அடிக்கும் குளிருக்கு ஒரு போர்வை கொடுத்து விட்டு ஒடி ஒழிகின்றனர்.அதனால் மாத்திரம் அவனின் பிரச்சினை தீர்ந்து விடாது.இதை உணர்ந்துதான் முஸ்லிம் காங்கிரஸ் நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி தெரிவித்தார்.
இன்று இறக்காமத்தின் வாக்குகளை குறிவைத்து சில அரசியல் வாதிகள் ஒரு சில உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த உதவிகளுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.அதற்காக முஸ்லிம் காங்கிரஸினால் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை யாரும் மழுங்கடிக்க முடியாது அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
அண்மையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறக்காமம் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு மூன்று மாடியிலான வைத்தியசாலை கட்டிடத்தை கட்டித் தருவதாக கூறியதாக அறிய முடிகிறது.அவர் யோசிப்பதற்கு முன்பே முஸ்லிம் காங்கிரஸின் சுகாதார பிரதியமைச்சர் இறக்காமம் வைத்தியசாலைக்கு முதற்கட்ட நிதியாக 75 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்.
54 மில்லியன் ரூபா நிதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட இக் கட்டிடத்தில் வெளி நோயாளர் பிரிவு உட்பட தங்கி சிகிச்சை பெறும் விடுதித் தொகுதியும் 21 மில்லியன் ரூபா நிதியில் சுகாதார பணிப்பாளர் காரியாலயமும் அமைக்கப்படவுள்ளது.
இத் திட்டடத்திற்கான முதற்கட்ட பணிகளை கட்டட திணைக்களம்
மேற்கொண்டு வருவதோடு விலைமணுவும் கோரப்பட்டுள்ளது.
எமது கட்சித் தலைவர் ரவுப் ஹக்கம் அவர்களின் அமைச்சின் மூலம் சிறுவர் புங்கா,வடிகான் அமைப்பு ,பொது மலசல கூடம் என்பன அமைப்பதற்கு 40 மில்லியன் ரூபாவும் நீர் இணைப்புக்காக 48 மில்லியன் ரூபாவும் மின் இணைப்புக்காக 3.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத் திட்டங்களும் நிறைவு பெற்றுள்ளன..
,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்,மாஹீர்.ஜவாத்பா,ஆரீப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ்,மன்சுர் ஆகியோர்கள் பல மில்லியன் ரூபாக்களை மக்களின் வாழ்வாதாரம் விளையாட்டு மைதான அபிவிருத்தி என பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து மக்களுக்காக வழங்கியுள்ளனர்.
இப்படி கோடிக் கணக்கில் எமது கட்சியினால் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களை இரண்டு அல்லது மூன்று இலட்சம் ரூபா பணத்தை வழங்கி விட்டு இறக்காமம் மக்களின் வாக்குகளை கொள்ளையிட முனைவது எவ்வளவு முட்டாள்தனமானது என முன்னாள் தவிசாளர் கேள்வியெழுப்பினார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறுகிய சிந்தனைகளை விட்டு விட்டு அம்பாரை மாவட்டத்தை விட்டுப் போட்டு வேறு எங்கையாவது போய் வாக்குகளைப் பெறலாமா என்று பாருங்கள்.இறக்காமம் சோடை போகும் பிரதேசமல்ல சமூக விடுதலையின் பக்கம் நிமிர்ந்து நிற்கும் பிரதேசம் என்பதை மறந்து விடாதீர்கள்
இறக்காமம் பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கீடு செய்த விபரங்கள் கிழே தரப்பட்டுள்ளது.
.