சம்சுல்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கல்முனை ஜவாத் மேடையில் உரையாற்றும் போது அதே மேடையில் அமர்ந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபுர் ஜவாத்தின் உரையை இடைமறித்து திட்டிய போது கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டம் நேற்றிரவு(31) கல்முனை பிரதான வீதியில் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனையின் தேசியப்பட்டியல் விவகாரத்தில் பள்ளிவாசல் தலையிட்டது பிழையென உயர்பீட கூட்டத்தில் ஜவாத் கூறியிருந்தார்.அத்தோடு ஹஸனலிக்கே எம்.பி வழங்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
அப்படியான நிலையில் இரவு நடந்த கூட்டத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீருக்கு எம்.பி வழங்க வேண்டுமென்று ம் அரசியல் செயற்பாட்டில் நஸீர்தான் திவீரமாக செயற்படுகிறார் என்று கூறிய போது ஆத்திரமடைந்த சட்டத்தரணி கபுர் ஜவாத்தை நோக்கி காரசாரமாக திட்டினார். சற்றும் எதிர்பார்க்காத ஜவாத் தன்னை சுவிகரித்துக் கொண்டு மச்சான்தானே ஏசிவிட்டுப் போகட்டும் என பதிலளித்தார் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்
இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.