பொத்துவில் பைஸர்
பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பல செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
இதற்கமைவாக விளையாட்டுக் கழகங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் காரியால தளபாடங்கள் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(12) பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஷாரத் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து காண்டு விளையாட்டுப் பொருட்களை கையளித்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட விளையாட்டுக் கழக தலைவர்களும் கலந்து கொண்டனர்.