News Update :

Monday, April 10, 2017

TamilLetter

சேவையின் சிகரம் சலீம்' சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் மகுடம்!



(றியாத் ஏ.மஜீத்)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது சட்டம்இ ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்று சென்றுள்ள ஏ.எல்.எம்.சலீமின்; மகோன்னத சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10) திங்கட்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்டொரண்டில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல்  பரிபாலன சபையின் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்இ கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ.மஜீத்இ சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாஇ அம்பாறை மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவாஇ சாய்ந்தமருது ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் யூ.எல்.எம்.காசீம்இ உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர்இ மாவட்ட மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஏ.ஜமால் முஹம்மட்இ சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல்  பரிபாலன சபையின் செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீத் உள்ளிட்ட உலமாக்கள்இ கல்விமான்கள்இ மரைக்காயர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் சலீமின் சேவைகளின் தொகுப்புக்களை உள்ளடக்கி 'சேவையின் சிகரம்' எனும் மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் சலீமின் சேவைகளை பாராட்டி பள்ளிவாசல் பரிபாலனை சபையினரால் பொன்னாடை போர்த்திஇ நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-