சர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகளில் இலங்கை பத்து வருடங்களின் பின் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த உலக சாம்பியன் பட்டத்தை இலங்கை வீராங்கனை சேனப் சேரம் பெற்றுக்கொடுத்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த செஸ் போட்டிகள் இத்தாலியில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெற்றுள்ளன.
இதில் 2000 ஆம் பிரிவின் கீழ் மகளிருக்கான உலக சாம்பியன் பட்டத்தை சேனப் சேரம் சுவீகரித்துள்ளார்.
50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீராங்கனைகள் உலக செஸ் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளின் 2000 ஆம் பிரிவின் கீழ் மகளிருக்கான போட்டிகளில் சேனப் சேரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
சர்வதேச செஸ் போட்டிகளில் இலங்கை வீராங்கனை ஒருவர் சம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.