News Update :

Saturday, April 8, 2017

TamilLetter

அதாஉல்லாவை தோற்கடித்தவர் அமைச்சர் ரிஷாட்


சப்ரி அகமட்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க முடியாது.

ஆனால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சிக்கு வேறு வடிவில் பலன் கிடைத்து வருகின்றது.மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் காலத்திலிருந்து சுமார் 30 ஆயிரம் வாக்குகள்   முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது.

பெரும் தலைவரின் மறைவுக்கு பிற்பாடு 10 வருட கணக்கின்படி சுமார் 40 ஆயிரம் வாக்குகள் அதிகரித்து காணப்படுகின்றன.இதிலும் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளாக மாற்றம் பெற்றது..

முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை பேரியல் அஸ்ரப் மற்றும் அதாஉல்லா ஆகியோர் தமக்கு சாதமான   வாக்குகளாக மாற்றி வந்தனர்.

பேரியல், ,அதாஉல்லாவை ஆதரித்த வாக்காளர்கள் இவர்களின் இயலாமை மற்றும் தோல்வி ஆகியவற்றால் வேறு ஒரு முகாமை தேட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அமைச்சர் ரிஷாட் அம்பாரை மாவட்டத்தில் தனது அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டார்.ரிஷாட்டின் தலைமையை வரவேற்று அவருடன் இணைந்தவர்கள் தனிப்பட்ட  ரீதியில் செல்வாக்குடையவர்கள் என்பதால்    தனது கட்சியை இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிந்தது.

2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்  சுமார் 38ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்த அதாஉல்லா  .இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிங்கள வாக்குகள் உட்பட   16 ஆயிரம் வாக்குகளைத்தான் பெற முடிந்தது.சுமார் 22 ஆயிரம் வாக்குகள்  குறைவடைந்திருந்தது.

இதே தேர்தலில் ரிஷாட் அணியினர் தனித்து களமிறங்கியதால் அதாஉல்லா இழந்த 22ஆயிரம் வாக்குகளும்  ரிஷாட்டின் கட்சிக்கே போய்ச் சேர்ந்தன.

அமைச்சர் ரிஷாட்டின் வருகை முஸ்லிம் காங்கிரசுக்கு எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக களநிலவரத்தின் புள்ளி விபரம் கூறவில்லை அதற்கு மாறாக அதாஉல்லாவின் வாக்கு வங்கியே பலத்த சேதத்துக்குள் மாட்டிக் கொண்டுள்ளது எனபது அதாஉல்லா நன்றாக உணர்ந்ததனால்தான் அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்டை திட்டித்தீர்த்தார்.

எனவே அமைச்சர் ரிஷாட் அம்பாரையில் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்யுமிடத்தில் அதாஉல்லாவின் வீழ்ச்சியை யாரும் தடுக்க முடியாது.



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-