News Update :

Thursday, April 20, 2017

TamilLetter

பொத்துவில் மக்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸின் காலடியில் சேவலங்கா மஜீத் எங்கே?


 எஸ். பர்வீஷ் அகமட்
இயலாதவன் எதையுமே கூறுவான் அறிவில்லாதவன் கூச்சல் போடுவான் என்று  அமெரிக்கன் அடிக்கடி கூறுவதுண்டு அந்த கூற்றை பொத்துவில் மக்களின் ஒரு சிலர் தொடர்ச்சியான  செயற்பாடாக செய்து  வருகின்றனர்

அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுக் கூட்டமும் அபிவிருத்தி நிகழ்வும் இடம் பெற்றது..இந்த நிகழ்வை எப்படியோ குழப்பிவிட வேண்டுமென்பதற்காக முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான கட்சியினரும் சேவலங்கா மஜீத் போன்றோர்களும் முயற்சி செய்தனர்.அவர்களின் அந்த முயற்சி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போக இறுதியாக கூட்டம் நடைபெற்ற இடத்தில் கூச்சல் போட்டு சாதனை படைத்தார்கள்.

பைஸல் காசீம் வரக் கூடாது,நஸீர் வரக் கூடாது,தவம் வரக் கூடாது ஹக்கிம் பொத்துவில் மக்களை ஏமாற்றுகிறான் என விடிய விடிய ஒப்பாரியும் ஒசையும் செய்தவர்கள் கல் எறிவதற்கும் முயற்சித்தனர்.

வேடிக்கை   என்னவென்றால்  முஸ்லிம் காங்கிரஸ் காரா்களை துாசன வார்த்தைகளால் திட்டித் தீர்த்து இன்னும் ஒரு மாத காலமாவதற்கு முன்பே  அதே   முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளிடம் சென்று காலில் விழுந்து ஊருக்கு அழைத்து பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கின்றனர்.

இப் போது முஸ்லிம் காங்கிரஸை அழிக்க நினைத்த சேவலங்கா மஜீட் மற்றும் அவரோடு இணைந்த அந்த  நபர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு திரிகின்றனர்.

நீங்கள் எப்படி கூத்தடித்தாலும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தால்தான் ஏதோ ஒன்று உங்கள் ஊருக்கு நடக்கும்.7ஆயிரம் வாக்குகளை வைத்துக் கொண்டு எதையுமே சாதிக்க முடியாது.மற்ற ஊர்களின் வாக்குகள் கிடைக்கும் போதுதான் மாகாண சபை உறுப்பினரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ பெற முடியும்.பக்கத்து ஊரனுகளுக்கு வம்பு வசை சொல்லிக் கொண்டு திரிவதால் எந்தப் பயனுமில்லை.

சேவலங்கா மஜீத் நாளைக்கு ஒரு சிங்கள அமைச்சரின் காலைப் பிடித்து  இணைப்பாளராக போடுங்கள் பொத்துவிலை காட்டிக் கொடுக்கிறேன் என்பார்.முன்பு விமல வீர திஸாநாயகா,மஹிந்த,சரத் வீர சேகர   போன்றவர்களிடம் பெற்றது போல் மீண்டும் பெறுவார்.

மாவட்ட அரசியலில் இணைந்து ஒரு உறுப்பினரை பெற வேண்டுமானால் சகோதர பிரதேசங்களோடு இணைந்து பணியாற்றுங்கள்.அதை விட்டு விட்டு காலத்திற்கு காலம் அவன் வரப்போடா இவன் வரப்போட கூச்சல் போடுவோம் கல் எறிவோம் என்பது  அமெரிக்கன் சொன்னது போல் ஆகிவிடும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-