மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமான இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் அடங்கியுள்ள சில விடயங்கள் சர்ச்சைக்குரியது என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த சபையின் தலைவர் பேராசிரியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே, குறித்த அறிவித்தலை தற்காலிகமான இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், விரைவில் அதனை திருத்தி ஒரு மாத காலப் பகுதிக்குள் மீண்டும் வர்த்மானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சிசிர கோதாகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.