அமைச்சர் ரிஷாட்டின் பெருப்பத்திற்கு இங்கு வந்து வீடு கட்டிக் கொடுக்கப் போறாராம்.வன்னியில் குந்த இடமில்லாமல் தவிக்கும் மக்கள் அங்கே தவித்து திரிகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கூறினார்.
தேசிய காங்கிரஸின் பொதுக் கூட்டம் நேற்றிரவு (02) அக்கரைப்பற்றில் இடம் பெற்றது.அதில கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சரும் அதன் தலைவருமான அதாஉல்லா இதனைத் தெரிவித்தார்.
இன்று முஸ்லிம் கூட்டமைப்பு என்று கூறுகின்றனர்.எந்த தேவையும் எனக்கில்லை நான் முதலமைச்சராகப் போறேன் என்று ஒரு சிலர் சொல்கின்றனர். நான் முதலமைச்சராவதற்கு முதலமைச்சு துா என்று மேடையில் துப்பினார்.
நான் மரக் கன்றுகள் கொடுக்கும் அமைச்சரல்ல நினைத்ததை செய்யக் கூடிய அமைச்சை 15 வருடங்களாக வைத்திருந்தேன்.அம்பாரை மாவட்ட பிரச்சினையை தீர்க்கப் போறேன் என்று சொல்லிக் கொண்டு அமைச்சர் ரிஷாட் இங்கு வாறார்.ஆள பெருப்பத்தப் பாக்கலய அவரின் ஊரிலேயு மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.அங்க செய்யக் கூடிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றது.அதைச் செய்யச் சொல்லுங்கள்.என்று கூறினார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா