News Update :

Saturday, April 1, 2017

TamilLetter

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவிகளில் திடீர் மாற்றம்


ஐக்­கிய தேசியக் கட்­சியில் 7 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை கட்­சியின்  முக்­கிய பத­வி­களில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும். இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் எதிர்­வரும் புதன்கிழமை இடம்­பெ­ற­வுள்ள கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தின் போது பல மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட உள்­ளன. 
ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலை­வ­ராக அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ செயற்­ப­டு­கின்ற நிலையில் அந்த பத­வி மூன்­றாக அதி­க­ரிக்­கப்­பட உள்­ளது. 
இதில் ஒன்­று சிறு­பான்மை இனத்தை பிரதி­நி­தித்­துவம் செய்யும் வகையில் வழங்­கப்­பட உள்­ளது. 
அதே போன்று கட்­சியின் உப தலைவர் பத­வி­யிலும் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் ஜன­நா­யக கட்­சியின் முன்னாள் தலைவர் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு உப தலைவர் பத­வி­யினை வழங்­கு­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. 
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தற்­போ­தைய உப தலை­வ­ராக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க செயற்­ப­டு­கின்றார். அதே போன்று 1989 ஆம் ஆண்டு முதற் தட­வை­யாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்ட தற்­போது அமைச்சு பத­வியில் இருக்கும் ஒரு­வ­ருக்கும் உப தலைவர் பதவி ஒன்று வழங்­கப்­பட உள்­ளது. 
அத்­துடன் மூன்று மாகா­ணங்­க­ளுக்­கான தேர்தல் மற்றும் உள்­ளூ­ராட்­சி ­மன்றத் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லாளர் பத­வி­யிலும் மாற்­றங்கள் கொண்டு வரப்­பட உள்­ளன. இத­ன­டிப்­ப­டையில் இளைய அமைச்சர் ஒருவர் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட உள்ளார். 
ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளைஞர் அணி­யிலும் லக் வனிதா மகளிர் அமைப்­பிலும் எவ்­வி­த­மான மாற்­றங்­களும் ஏற்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழுவில் புதிதாக இணைத்துக் கொள்ளும் சிலருக்கும் அன்றைய தினம் கடிதங்கள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-