News Update :

Saturday, April 1, 2017

TamilLetter

கபடத்தனங்களுக்கு இ​டமில்லை - ரவூப் ஹக்கீம்


அதிகாரப்பகிர்வு விடயத்திலும், அபிவிருத்தி என்ற விடயத்திலும் இரு சமூகங்களும் ஒன்றிணைத்துதான் பயணிக்க வேண்டும். பிரிந்து பயணிக்கும் பயணம் யாருக்கும் பயன்தரப் போவதில்லை.
கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் அதில் அனைத்து சமூகங்களும் நன்மையடைய வேண்டும். யாருடைய விகிதாசாரமும் அவர்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே வீழ்ச்சியடைவதற்கான கபடத்தனமான அபிவிருத்தியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. புரிந்துணர்வோடும், விட்டுக்கொடுப்போடும் எல்லாவற்றையும் அனுபவிக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 4.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக சுகாதார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று (31) கலந்து கொண்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-