News Update :

Thursday, April 27, 2017

TamilLetter

அக்கரைப்பற்றில் இனவாதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருடன் முரண்பாடு







அக்கரைப்பற்றில் இனவாதிகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் இன்று (28) இடம் பெற்றது.

இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் சிங்கள கடும் போக்கு வாதிகளால் நிறுவப்படவிருக்கின்ற  புத்தர் சிலையை தடுத்து றிறுத்தக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் வழிகாட்டலில்  அக்கரைப்பற்று இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான சமூக வியலாளர்களும் பொது மக்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களின் காணிகளை பறிக்காதே, இன முறுகலை  ஏற்படுத்தாதே, சமாதானத்தைக் குழப்பும் இனவாதிகளை அடக்கிவை, முஸ்லிம்களை தீண்டாதே, ஜனாதிபதியே நல்லாட்சி இது தானா?,என இன்னும் பல்வேறு கோசங்கள் அடங்கிய வாசகங்களோடு ஆர்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வாசலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள  பிரதேச செயலகத்திற்கு செல்வதற்கு ஆர்ப்பாட்டக் காரர்கள் முயற்சி செய்த போது அக்கரைப்பற்று பொலிஸார் ஆர்பாட்டக்காரா்களை தடுத்து நிறுத்தினர்.

பொலிஸாரின் இச் செயலுக்கு எதிராக திரண்டெழுந்த மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவ் மோதலை தவிர்க்கும் முகமாக அக்கரைப்பற்று பொலிஸாரால் சம்பவ இடத்திற்கு  அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்  வர வழைக்கப்பட்டார்..

பிரதேச செயலாளருடன் தமது ஆர்பாட்டத்தின் நோக்கம்பற்றி இளைஞர்கள் தெளிவுபடுத்தினர்.


இதன் போது சமாதானத்திற்கு குந்தகம் விளைவிப்போருக்கு எதிரான தமது எதிர்ப்பை தெரிவிப்பதோடு   புத்தர் சிலை றிறுவுவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் அடங்கிய  மகஜரை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-