News Update :

Sunday, April 2, 2017

TamilLetter

24 பணியாளர்களுடன் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.


24 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த  சரக்கு கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.
தென்கொரியவுக்கு சொந்தமான இக் கப்பல்  தென் அட்லண்டிக் பகுதியில் இறுதியாகக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கப்பலை தேடும் பணியில் பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.
கப்பலை தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் கப்பலில் பயணித்திருந்த இரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் 8 கொரியர்களும் 16 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் இருந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்டுள்ள போதும் ஏனையவர்களை காணவில்லை அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-