இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம்,
08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.
இப் பயணத்திற்காக “சைக்கிளை” இவ்வாறு வடிவமைத்துள்ளார் வவுனியா ஆசிரியர் தர்மலிங்கம் பிரதாபன்.
தனியாக இவர் ஆரம்பித்துள்ள இப் பயணம் பலராலும் உன்னிப்பாக அவதானிக்கப் படுகிறது.
முன்னர் திட்டமிட்ட படி 07.04.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க இருந்த பயணம் தவிர்க்க முடியாத காரணத்தினால் 08.04.2017 சனிக்கிழமை மாற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது என ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் என் கோரிக்கையினை அடிப்படையாக வைத்து இப் பயணத்தை ஆரம்பித்துள்ளார் என்பது தொடர்பில் எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை.