News Update :

Tuesday, March 28, 2017

TamilLetter

ஆஸ்திரேலியாவை ‘டெப்பி’ சூறாவளிப் புயல் தாக்கியது! மக்கள் பயத்தில் உறைந்தனர்! (VIDEO)

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்துப் பகுதியை இன்று காலை டெப்பி சூறாவளிப் புயல் தாக்கியது. இந்தப் புயல் தாக்குமென்று முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 25 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பலர் தங்கள் வீட்டுக்கடியில் இருக்கும் பாதாள அறையில் பதுங்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த புயலின் சீற்றம் அங்கு தொடங்கிய நிலையில் இன்று உச்சக்கட்டத்தை எட்டியது.
இன்று மதியத்திற்குள் புயலின் மையப்பகுதி ஏர்லீ கடற்கரையை நெருங்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
ஒரு மணி நேரத்திற்கு 12 கிலோ மீட்டர் தூர வேகத்தில் செல்லும் அந்த புயலைத் தொடர்ந்து 260 கிலோ மீட்டர் வரை பலம் கொண்ட காற்று வீசும். மேலும் கடந்த சில மணி நேரங்களாக கனத்த மழை விடாமல் பெய்கிறது. இது ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு உள்ள சூறாவளிப் புயல் என்று குயீன்ஸ்லாந்து ஆளுனர் அன்னாஸ்தாசியா பாலாஸுக் கூறினார்.
###காணொளி: நன்றி Breaking Disaster
தற்போதைய நிலவரப்படி 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் பறந்துள்ளன. புயலின் மையப்பகுதி தாக்குவதற்கு முன்பே பலத்த காற்று காரணமாக சுற்றுப்பயணி ஒருவர் கார் விபத்தில் இறந்தார். 
காற்றின் வீரியம் தாங்காமல் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதோடு, குயீன்ஸ்லாந்தைச் சுற்றியுள்ள பல கடற்கரைகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் வரும் அபாயம் உண்டு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
‘டெப்பி புயல் மெதுவாக நகரும் புயல். அடுத்த 12லிருந்து 15 மணிநேரத்திற்கு பொதுமக்கள் இந்த புயலின் சீற்றத்தைத் தாங்க வேண்டும். யாரும் பாதுகாப்பு இடத்தை விட்டு வெளியேற வேண்டாம். புயலால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிச்செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது’ என்று குயீன்ஸ்லாந்து ஆளுனர் அங்குள்ள மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு முன் கேய்மன் தீவை இந்த ‘டெப்பி’ சூறாவளிப் புயல் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-