கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் எமது கட்சிக்கு கிடைத்த ஆளுமைமிக்க சமூகவாதியென மருதமுனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்ஸார் மௌலான தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இன்று இரவு (26) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.அன்ஸார் மௌலான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் எத்தனையே நபர்கள் காலத்திற்கு காலம் கட்சியை விட்டுப் பிரிவதும் மீண்டும் கட்சியில் இணைவதும் வழமையான விடயமாக மாறிவிட்டது.
பிரிகின்ற அல்லது இணைகின்ற நபர்கள் தங்களின் சுய அபிலாசைகளை அடைவதற்காகவும் அடையவிடாமல் போனதற்காகவுமே இந்த இரண்டு நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளது.
ஆனால் தவம் அவர்களின் இணைவு அறிவு ரீதியானதாகவும் சமூக தேவை கருதியுமே நடந்தேறியுள்ளது.இன்று கட்சியையும் அதன் தலைமையும் பாதுகாக்கும் ஒரே நபராக நான் தவத்தை பார்க்கின்றேன்.
2002ம் ஆண்டு காலத்திலிருந்து தவத்தின் நடவடிக்கைளை நான் உற்று நோக்கி வருகின்றேன் சிறந்த தலைமைத்துவ பன்புகள்இசமூக ரீதியான கருத்துக்கள் என பலதரப்பட்ட திறமைகளால் பலரை அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இன்று அமைச்சர் ரிஷாட்டின் தலைமையின் போக்கில் சமூக விடுதலையை பெற முடியாது என தெளிவாக உணர்ந்த இளைஞர்கள் எமது கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.இன்னும் சிலர் இணைவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தை நோக்கியே பயணிக்கும் அதற்கான சான்றுகளே இன்றைய நிகழ்வுகளாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மருதமுனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் சட்டத்தரணி றகீப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பொது மக்களும் இதில் கலந்து கொண்