News Update :

Wednesday, March 8, 2017

TamilLetter

சவுதி மன்னர் வருகைக்காக இந்து பெண் தெய்வங்களின் சிலை இடுப்பை மட்டுமே மறைக்கப்பட்டிருக்கும்


இந்தோனேசியாவில் உள்ள பாலி சிலைகள்  சவுதி மன்னரின் வருகைக்காக மூடப்படாது என பாலி தீவு நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 
சவுதி மன்னர் கிங் சல்மான்   ஜக்கார்த்தாவிற்கு ஒரு வார பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் முதல் முறையாக பாலி தீவுக்கு வருகைப் புரிய திட்டமிட்டுள்ளார்.  
இதனிடையே, இந்தோனேசிய அதிபர் ஜொகோ விடோடோவைச் சந்திக்க  போகோர் அரண்மனைக்கு கிங் சல்மான் வந்த போது, அங்குள்ள சிலைகள்  துணி போர்த்தப்பட்டிருந்தது.  இஸ்லாமிய நாட்டிலிருந்து வருகைப் புரிந்துள்ள மன்னரை மதிக்கும்  வகையில், அங்குள்ள சிலைகள் மூடப்பட்டன.  
ஆயினும், இதே நடைமுறையை  பாலியில் கடைப்பிடிக்க முடியாது என  அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடு என்ற போதிலும், அங்கு  இந்துக் கடவுள்களின் சிலைகளும் சரித்திர பொக்கிஷங்களும், அழகான கடற்கரைகளும் அமைந்துள்ளதால், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. 
இங்குள்ள இந்து பெண் தெய்வங்களின் சிலை இடுப்பை மட்டுமே மறைக்கப்பட்டிருக்கும்.கடந்தக் காலங்களில் பாலி பெண்கள் தங்கள் மார்பை மறைக்கும் உடைகளை அணிவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
"கிங் சல்மான் பாலி வரும் போது, அந்த சிலைகள் உள்ளது உள்ளபடியே இருக்குமே தவிர, நாம் எதையும் மறைக்கப்போவது இல்லை. காரணம்  இது எங்கள் கலாச்சாரம். அவை ஒரு கலை " என அவர் தெரிவித்தார். 
அதே போல், சிலைகளை மறைப்பதற்கு இங்குள்ள அதிகாரிகள் யாருக்கும் எந்தவொரு உத்தரவும் கிடைக்கவில்லை என பாலி  உள்ளூராட்சி பேச்சாளர் தேவ மகேந்திரா தெரிவித்தார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-