News Update :

Saturday, March 11, 2017

TamilLetter

அக்கரைப்பற்று விளையாட்டுக் கழக வீரா்களுக்கு பாராட்டு



.
எம்.ஐ.இர்பான்

அண்மைக் காலமாக உதைப்பந்தாட்டத்துறையில் பல சாதனைகளை ஏற்படுத்தி வரும் அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்தாட்ட வீரா்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு    (11)  கழகத் தலைவர் ஏ.கே.குத்துாஸ் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது மாகாண சபை உறுப்பினரால் உதைப்பந்தாட்ட பாதணி மற்றும் சீறுடை என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் சிறந்த வீரா்களுக்கு நினைவுச் சின்னங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-