முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரன் என்பதைவிட ஹக்கீம் காங்கிரஸ் என்பதில்தான் நான் பெருமைப்படுகிறேன் என மருதமுனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் சட்டத்தரணி றகீப் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள் நேற்றிரவு (26) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் முன்னிலையில் இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
முஸ்லிம் காங்கிரஸ் இந் நாட்டு முஸ்லிம்களின் உரிமைக்காக போராடும் மாபெரும் இயக்கமாகும்.இந்த இயக்கத்தை யாரும் அழித்துவிட முடியாது.யாழ்ப்பாணத்திலிருந்து சொப்பின் பேக்குடன் அகதியாக சென்ற ரிஷாட் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரா் என்றால் அவர் என்ன தொழி்ல் செய்துள்ளார்.அவரின் தொழில் அரசியல் வியாபாரம்
அதே போன்றுதான் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா முஸ்லிம் விரோத சக்திகளுடன் இணைந்து அச் சக்திகளுக்கு நியாயம் கற்பித்த மனிதர்.எப்போதெல்லாம் நமக்கு அநியானம் நடக்கிறதோ அப்போதெல்லாம் மௌனமாக இருந்து விடுவார்.எல்லாம் முடிந்ததும் பெரும்பான்மை ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கு துனைபோவார்.
பொத்துவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை புலிகள்தான் செய்தார் என கொலையாளிகளின் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவாக பேசினார். தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை வந்த போது ஒரு தகட்டைத்தன் கழற்றினார்கள் என்றார்.அளுத்கமை பற்றி எரியும் போது இங்கே இசைக் கச்சேரி நடாத்தினார்.இப்படியாக எத்தனையோ விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனவே தனிமனித சுயநலத்திற்காக இன்று சமூகத்தை விலைபேசுகின்றனர்.இதை எல்லாம் நன்றாக உணர்ந்த இளைஞர்கள் நமது சமூகக் கட்சியோடு இணைந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.சட்டத்தரணி றகீப்