News Update :

Saturday, March 4, 2017

TamilLetter

சுகாதார அமைச்சர் நஸீரின் சவாலை ஏற்றார் அன்ஸில்

குல்ஸான்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் முன்னாள் 
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸிலுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

நிந்தவூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜப்பார் அலியின் தலைமையில் நேற்று இடம் பெற்றது.

இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,பிரதியமைச்சர்களான பைஸல் காசீம்.ஹரீஸ்,மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,அரீப் சம்சுதீன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள்; கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர் நேற்று எமது கட்சிக்கு எதிராக இதே பிரதேசத்தில் நேற்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.இக் கூட்டத்தை நான் தடுக்கவா என்று தலைவரிடம் அனுமதி கேட்டிருந்தேன் அவர் இதற்கு அனுமதி வழங்கவில்லை அப்படி அனுமதி வழங்கிருந்தால் ஹஸனலியின் கூட்டம் இல்லாமல் செய்திருப்பேன் அத்தோடு இவர்களுக்கு முடிந்தால் இப்படியான கூட்டத்தை அட்டாளைச்சேனையில் வந்து நடாத்திக் காட்டட்டும் என ஹஸனலி,அன்ஸில்,தாஹீர் ஆகியோருக்கு பகிரங்க சவால் விடுத்தார் மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்.

மாகாண அமைச்சரினால் விடுக்கப்பட்ட சவால் தொடர்பாக சட்டத்தரணி அன்ஸிலிடம் எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு கேட்ட போது நாங்கள் பதவிகளுக்காக போட்டி போடவில்லை சமூகத்திற்காக ஜீகாத் செய்ய முன் வந்துள்ளோம் எனவே எங்களது பயனம் இறைவனின் பள்ளிவாசலிருந்தே தொடங்கப்பட்டது. இதை யாரும் தடுத்து விட முடியாது.நிட்சயமாக அட்டாளைச்சேனையில் மட்டுமல்ல சகல பிரதேசங்களிலும் உண்மையைத் தேடிய  கூட்டம் நடாத்தியே தீருவோம் என்றார் அன்ஸில்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-