News Update :

Sunday, March 26, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் ஊடக நிகழ்ச்சியில் தடுமாறுகி ன்றனர் - முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கலீல்





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்  அண்மைக் காலமாக      ஊடகங்கள் நடாத்தும்    நேர்காணல் நிகழ்ச்சிக்கு முந்தியடித்துக் கொண்டு போகின்றனர்.

இப்படியான நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு சமூகம் சார்ந்ததாகவும்,கட்சி சார்ந்ததாகவும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு.

ஆனால்  இன்று அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரியவர்கள் அறிவுரீதியான பதில்களை வழங்குகின்றார்களா என்பது கேள்வியாகவே உள்ளது

ஒரு கட்சி சார்ந்த பிரதிநிதி ஒரு ஊடக நிகழ்ச்சிக்கு செல்லும் போது அந்த கட்சி அனுமதிக்கின்றதா?அல்லது கட்சி சார்ந்த  விடயங்களை விபரிக்கும் போது அது ஆரோக்கியமான கருத்தாக அமைகின்றதா என்பதை பரிட்சித்துப் பார்க்க வேண்டிய தேவை  அவசியமாகின்றது.


எனவே  இப்படியான நேரடி விவாதங்களுக்கு செல்லும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் கவணமாக தனது பதில்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுகின்றேன்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-