News Update :

Sunday, March 19, 2017

TamilLetter

நியூயார்க் மீது அணுகுண்டு! வலைத் தளங்களில் பரபரப்பு


அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி? என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி இருக்கிறது.
உலக நாடுகள் பலவும் போர்ச் சூழலை எதிர்கொள்ள போராடி வருகின்றன. வட கொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு அண்டை நாடுகளை பதற்றமான சூழலிலேயே வைத்திருக்கிறது.
இதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அண்மையில் போர் ஒத்திகை ஒன்றை நடத்தியது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டால் அரசும் பொதுமக்களும் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஒரு திட்டத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை வடிவமைப்பதற்காக பல லட்சம் டாலர்கள் செலவு செய்து 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று மட்டுமின்றி இதற்கென 2 கோடி உருவகங்களை தத்ரூபமாக கணினியில் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு உருவகமும் தனிமனிதனைக் குறிப்பதாகும். 
மேலும் பேரிடர்க் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல் படுகின்றனர் என்பது உள்ளிட்ட தகவல்களை அமெரிக்கா முழுவதிலும் இருந்து திரட்டி இந்தச் சிறப்புத் திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளனர். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-