வில்பத்து வனப்பிரதேசத்திற்கு அருகில் இருக்கின்ற 04 வனப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது தொடர்பில் சிலர் பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தில் ஊடாக, மக்கள் தற்போது வசிக்கின்ற கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் முஸ்லிம் வணக்கஸ்தளங்களை அரசு மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்துவதாக சிலர் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
சிலர் தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்காக விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு அருகில் இருக்கின்ற வனப் பிரதேசங்களினதும், பிரதேச மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவுமே அந்த வனப் பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.