News Update :

Monday, March 6, 2017

TamilLetter

ஜவாத், அன்ஸில்,தாஹீர் அட்டப்பள தோப்புக் கண்டத்தில் பல மணித்தியாலங்கள் கலந்துரையாடல் - தகவல் கசிந்தது



எஸ்.அனீஸ்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கல்முனை ஜவாத் இரகசியமான முறையில் கட்சியின் தலைவருக்கெதிராக சதித் திட்டங்களை நடாத்தி வருவதாக அறியப்படுகின்றது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த 17 வருட காலமாக எமது சமூகத்திற்கு எதையுமே பெற்றுத் தரவில்லை அவரின் தனிப்பட்ட சுகபோக வாழ்க்கை நடாத்துவதிலே இக் காலங்களை செலவளித்துள்ளார் என்று பல இடங்களில்; கூறியுள்ளார்.

கட்சியின் தலைமை தாங்குபவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென்று எனக்கு தோனுகின்றது என்று அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் ஜவாத் கூறியிருந்தார்.

கட்சியின் மூத்த போராளி ஹஸனலி நேர்மையாக செயற்பட்டதினால்தான் ஹக்கீமால் அவர் பழிவாங்கப்பட்டார்.

இப்படியாக ஹக்கீம் தொடர்ந்து செயற்படுவதனால் இறுதியாக மீதமிருந்த ஆரம்ப போராளியையும் கிழக்கு மண் இழந்து தவிக்கின்றது என்று கூறி வருகின்றார்.

ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென கடந்த உயர்பீட கூட்டத்திலும் ஜவாத்; கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு அட்டாளைச்சேனை மக்கள் கடும் எதிர்ப்பும் ஜவாத்துக்கு தெரிவித்திருந்தனர்.

இப்படியான சூழ்நிலையிலே நிந்தவூர் அட்டப்பளம் தோப்புக் கண்ட ஹொட்டலில் முன்னாள் தவிசாளரான அட்டாளைச்சேனை எம்.ஏ.அன்ஸில்,நிந்தவூர் எம்.ஏ.தாஹீர் ஆகியோரை இரகசியமாக சந்தித்து ; கலந்துரையாடியுள்ளார்.

காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இக் கலந்துரையாடல் மாலை 5.00 மணி வரை நீண்டு கொண்டே சென்றது. 

இதன் மூலம் ஹஸனலியின் செயற்பாடுகளுக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ஆதரவு தெரிவித்து வருவதால் ஹஸனலியின் செயற்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
;.
அத்தோடு அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொண்ட நிந்தவூர் கூட்டத்திற்கு ஜவாத் சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-