News Update :

Friday, March 24, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை மக்கள் சமூக உணர்வு மிக்கவர்கள் - சேகு இஸ்ஸதீன்

ஏ.எல்.நஸார்
சேகு இஸ்ஸதீனின்  பிரச்சார செயலாளர்.




நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் எப்போதுமே  முஸ்லிம் சமூக உணர்வு மிக்கவா்களாக காணப்படுகின்றனர்.

அதற்கான அடையாளங்களே முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தில் அக்கரைப்பற்றோடு சரி சமனாக இணைந்து அரும்பாடு பட்டவா்கள்.

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக் கொண்ட முக்கிய பிரதான ஊர்களில் அட்டாளைச்சேனை முதன்மை வகிக்கின்றது.

கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில்,நிந்தவுர் ஆகிய பிரதேசங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கைப்பிடிக்குள் இருந்த போதும் அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று ஆகிய இரண்டு பிரதான ஊர்களே முஸ்லிம் காங்கிரசுக்கு  நுாறு வீதமான பங்களிப்பை வழங்கிய வரலாறை யாரும் மறந்துவிட முடியாது.

இருந்த போதும் ஒவ்வொறு தேர்தல் காலகட்டங்களிலும் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது பிற்போடப்பட்டு வந்துள்ளது..

இவ் வேளையில்  அட்டாளைச்சேனை பிரதேசத்தின்.முப்பது வருட தாகத்தை தீர்க்க சரியான சந்தர்ப்பம் தலைமைக்கு கிட்டியுள்ளது.இதை தலைமை சரியான முறையில் வழிநடாத்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-