News Update :

Thursday, March 2, 2017

TamilLetter

ஹஸனலி,அன்ஸில்,தாஹீர்,தாஜ்சுதீன் கட்சியிலிருந்து விலக்கப்படுவதற்கான சாத்தியம்


குல்ஸான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக   இன்று மாலை நிந்தவூரில்  மாபெரும் கூட்டம் ஒன்று நடைபெருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை அதில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரீ.ஹஸனலிக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் துரோகம் இழைத்து விட்டதாகவும் முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அவரிடம் இல்லை ;இதை எமது மக்களிடம் எடுத்துக் கூறவே இக் கூட்டத்தை  ஒழுங்கு படுத்தியுள்;ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது ;.

முன்னாள் செயலாளர் ஹஸன் அலி அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நேரடியாகவும் தொலைபேசி மூலமும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதே வேளை ஹஸனலியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சில முக்கிய பிரமுகர்கள் தலைவரோடு இது விடயமாக உரையாடியுள்ளனர்.

குறிப்பாக மாகாண சபை உறுப்பினர் கல்முனை ஜவாத் தான் கொழும்பில் இருப்பதாகவும் முடியுமான வரை கூட்டத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதாகவும் எனக் கூறியுள்ளார்.

பொத்துவிலின் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜ்சுதீன் நிட்சயமாக இக் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதாக தமிழ் லெட்டர் இணையத் தளத்திற்கு உறுதிபடக் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கருத்து தெரிவிக்கையில் எமது கட்சியைச் சேர்ந்த முன்னாள் செயலாளரும் மூத்த உறுப்பினருமான ஹஸனலி கட்சி சார்பாக தன்னை அழைத்துள்ளதால் இதில கலந்து கொள்வதில் தவறில்லையென எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இது முஸ்லிம் காங்கிரஸின் கூட்டமே தவிர மாற்றுக் கட்சியின் கூட்டமல்ல இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் கீதம்,கட்சிக் கொடி,கட்சியின் நிறம் எல்லாமே காணப்படும் ஆகவே எமது பிரதேசத்தில் நடாத்தும் கூட்டத்திற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என்றார் நிந்தவுர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.தாஹீர்

மேலும் இக் கூட்டத்திற்கு கட்சியின் சில முக்கிய உயர்பீட உறுப்பினர்களான அக்கரைப்பற்று ஹனிபா மதனி,அட்டாளைச்சேனை வாஹீட் மாஸ்டர்,நற்பட்டிமுனை யு.எல்.தௌபீக்,இறக்காமம் றியாஸ் மாஸ்டர் மற்றும் கல்முனையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொள்வர்.

ஹஸனலி ஏற்பாடு செய்துள்ள கூட்டம் தொடர்பாக கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தலைவருக்கு எதிராக நோக்கப்படும் இப்படியான கூட்டம் நடைபெற்றால் இதில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-